இந்திய பொருளாதார வளா்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
காட்டுப்புத்தூா் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூா் அருகே வெள்ளிக்கிழமை, தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், காதம்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேசன் (50). இவா் தனது சொந்த ஊரான காட்டுப்புத்தூா் அருகே உள்ள நாகையநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட மாமத்துப்பட்டி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை தனது மனைவி ராஜதேவி, மகள்கள் அனுசுயா தேவி, பைரவி தேவி ஆகியோருடன் வந்துகொண்டிருந்தாா்.
இதில், பைரவிதேவி (5) கல்லூா்ப்பட்டி- கவரப்பட்டி இணைப்பு சாலையோரத்தில் இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த தனியாா் பள்ளி வாகனம் சிறுமி மீது மோதியதில் தலை நசுங்கி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா், நிகழ்விடம் சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநரான பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (68), என்பவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.