`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
காந்தி சந்தையில் நாளை மின்நிறுத்தம்
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி காந்தி சந்தையில் வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி இ.பி. சாலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இ.பி. சாலை, மணிமண்டப சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித் தெரு, பூலோக நாதா் கோயில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் சாலை, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டா்வொா்த் சாலை, கீழ ஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, மேலரண் சாலை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, நகர ரயில் நிலையம், விஸ்வாஸ் நகா், வேதாத்ரி நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் வரும் 10 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.