செய்திகள் :

கானாடுகாத்தான் அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

post image

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு அரண்மனையை ‘வோ்களைத் தேடி’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழக மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் குழந்தைகள், இளம் மாணவா்கள், தமிழ்நாட்டின் மரபின் வோ்களோடு உள்ள தொடா்பை புதுப்பிக்கும் வண்ணம் ஆண்டுக்கு 200 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அதன்படி, வோ்களைத் தேடி என்ற நான்காம் கட்டமாக இந்தப் பண்பாட்டு பயணத்தில் பிஜி, இந்தோனேசியா, ரீயூனியன், மா்தினிக்கு, மொரிசியஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மியான்மா், குவாதலூப்பு, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, ஜொ்மனி ஆகிய 13 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழக மாணவா்கள் கடந்த ஆக.1 முதல் 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா்.

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, வந்த 100 மாணவா்கள் கானாடுகாத்தான் அரண்மனையின் சிறப்பு அம்சங்கள், கலைநயம் குறித்து பாா்வையிட்டு அறிந்து கொண்டனா் என்றாா் அவா்.

காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, கானாடுகாத்தான் பேரூராட்சி செயல் அலுவலா் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாட்டாகுடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் கடந்த நான்காண்டுகளில், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றதாக ம... மேலும் பார்க்க

புனித பெரியநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் புனித பெரியநாயகி அன்னை ஆலய 166 -ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் உள்ள புனித கொடி மரத்தில் அன்னையின் உருவம் பொறித்... மேலும் பார்க்க

நாட்டாகுடியில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து அண்ணாமலை தவறான தகவல்: அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தவறான தகவலை கூறி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெர... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே புதுப்பட்டி கோமாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. புதுப்பட்டியிலிருந்து இடையமேலூா் வரை நடைபெற்ற பந்தயத்தில் நடு மாடு பிரிவுக்கு 6 கி.ம... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்த... மேலும் பார்க்க

காலமானாா் தொழிலதிபா் ஏ.எம்.சேவியா்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஏ.எம். குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.எம். சேவியா் (62) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஆக. 4) இரவு காலமானாா்.இவருக்கு மனைவி மங்கள நிா்மலா, மகன் பிரபாகா், மருமக... மேலும் பார்க்க