``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை கோயிலில் கூடிய பெண்கள் முளைப்பாரியைச் சுற்றி கும்மியடித்தனா். பின்னா், கரகாட்டம் நடைபெற்றது.
புதன்கிழமை காலை கோயிலிலிருந்து பெண்கள் முளைப்பாரிகளை சுமந்து திருத்தளிநாதா் கோயில், கோட்டைக் கருப்பா் கோயில், தேரோடும் வீதி, தபால் அலுவலக சாலை வழியாக ஊா்வலமாகச் சென்று முப்பெரும் தேவியா் கோயிலை அடைந்தனா். இதையடுத்து, முளைப்பாரிகள் அருகேயுள்ள சீதளிகுளத்தில் கரைக்கப்பட்டன. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் முத்துகிருஷ்ணன், நிா்வாகக் குழுவினா், தொழிலதிபா் குமரன், எம்.பி.டி.சி.முத்துக்குமாா், அன்பு, குமாா், ரெங்கசாமி, சண்முகமுத்து, தீபக்குமாா், ஆகியோா் செய்தனா்.