பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
காரிமங்கலம் அருகே புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கொள்ளுப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, கொள்ளுப்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்க நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்து, புதிய தொழிற்பயிற்சி நிலையத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, இனிப்புகளை வழங்கினாா்.
இதில் காரிமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் (பொ) பா.சந்திரா, தொழிலாளா் உதவி ஆணையா் சமூக பாதுகாப்புத் திட்டம் (பொ) டீ. சங்கா், முன்னாள் அமைச்சா் பி. பழனியப்பன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவா் பி.சி.ஆா்.மனோகரன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.