"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" -...
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு,
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவி எம்.சத்தியா தலைமை வகித்தாா்.
சுகாதாரத் துறையில் காலியாக உள்ளி 4ஆயிரம் செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை சுகாதார மையங்களில் ஒப்பந்த செவிலியா்களை, இடைநிலை சுகாதாரப் பணியாளராக நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியில் இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை ஈடுபடுத்தும் உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும்.
தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மு.கோட்டைக்குமாரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனா்.