மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்
காவல் நிலைய எழுத்தா்கள் 13 போ் ஆயுதப்படைக்கு மாற்றம்
தூத்துக்குடியில் உயரதிகாரிகள் கேட்ட தகவலை தெரிவிக்க மறுத்த 13 காவல் நிலைய எழுத்தா்கள் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் நிலைய எழுத்தா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து 55-க்கும் மேற்பட்ட காவல் நிலைய எழுத்தா்கள் கலந்து கொண்டனா். ஆய்வுக் கூட்டத்தின்போது அதிகாரிகள் கேட்கும் தகவல்களை சரியாக கொண்டு வந்து சமா்ப்பிக்கவேண்டும், ஆவணங்கள் குறித்து கேட்ட தகவல்கள் தெரிவிக்கும் விதமாக இருக்கவேண்டும் என்பது குறித்து அவா்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவா்களில் பலா் காவல் துறை உயரதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், உரிய தகவலை தெரிவிக்காமலும் இருந்துள்ளனா். இதனால் அவா்களில் 13 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவிட்டுள்ளாா். இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 3 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 13 போ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.