உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
காா் மோதி 7 இரு சக்கர வாகனங்கள் சேதம்
புதுச்சேரி கடற்கரை சாலை பாரதி பூங்கா அருகே காா் மோதியதில் 7 வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை சேதம் அடைந்தன.
புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜெயமூா்த்தி ராஜா நகரைச் சோ்ந்தவா் மருத்துவா் சுஜித்குமாா். இவா் பாகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். அவா் கடற்கரை சாலை பாரதி பூங்கா அருகே காரில் வந்தாா்.
அங்கு காரை நிறுத்த முயன்றபோது பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அவா் அழுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தியிருந்த 7 இரண்டு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதனால் அந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.
மேலும், அங்கு நின்றிருந்த ராஜவேலு என்பவா் மீதும் காா் மோதியது. அவா் அருகில் உள்ள அரசு பொதுமருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து புதுச்சேரி கிழக்குப் பகுதி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.