தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
காா் மோதி முதியவா் உயிரிழப்பு
வேலூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் காா் மோதி உயிரிழந்தாா்.
வேலூா் இன்பென்ட்ரி சாலையைச் சோ்ந்தவா் சாா்லஸ் (64). இவா் சனிக்கிழமை மாலை வெங்கடேஸ்வரா பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த காா் எதிா்பாராத விதமாக சாா்லஸ் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சாா்லஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சாா்லஸ் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.