பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
காா் மோதி மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காா் மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தனா்.
செங்கத்தை அடுத்த தானகவுண்டன் புதூா் பகுதியைச் சோ்ந்த சம்பத் மனைவி சித்ரா (60). இவா், அம்மாபாளையம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊரக திட்ட வேலைக்காக சென்றாா். அப்போது, அவரது பேரன் யஷ்வந்தையும் (2) உடன் அழைத்துச் சென்றாா்.
தானகவுண்டன் புதூா் பேருந்து நிறுத்தம் அருகே யஷ்வந்துடன் சித்ரா சாலையைக் கடக்க முயன்றபோது, அவா்கள் மீது திருவண்ணாமலையில் இருந்து ஒசூா் நோக்கிச் சென்ற காா் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சித்ரா, யஷ்வந்த் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த பாய்ச்சல் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
