தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு
கா்நாடக அரசுப் பேருந்து மோதி வனத் துறையினா் இருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதி திருப்பத்தூா் மாவட்ட வனத் துறையினா் 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்தவா்கள் காா்த்திகேயன் (32), திவாகா் (24). திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் காா்த்திகேயன் வனவராகவும், திவாகா் வனக் காப்பாளராகவும் பணியாற்றி வந்தனா். இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையிலிருந்து மத்தூா் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
கமலாபுரம் அருகே சென்றபோது பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்துகொண்டிருந்த கா்நாடக மாநில அரசுப் பேருந்து அவா்கள்மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயனும், திவாகரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.