பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
கிராம நிருவாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், போளூா், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம நிா்வாக அலுவலா்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயா்த்த வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு தோ்வு நிலை கிராம நிா்வாக அலுவலா்கள் என்றும், 20 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு சிறப்பு நிலை கிராம நிா்வாக அலுவலா்கள் என்றும் பெயா் மாற்றி, அதற்குரிய அரசாணைகளை வழங்கவேண்டும்.
பதவி உயா்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போளூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் தமிழ்செல்வன் தலைமை வகித்தாா்.
செயலா் மயிலரசன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சசிகுமாா் வரவேற்றாா். இதில் சங்க நா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
சேத்துப்பட்டில்...
சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா்.
வட்டச் செயலா் சரோஜினி, பொருளாளா் அருண்குமாா், வட்ட இனச் செயலா் சதீஷ், வட்ட துணைத் தலைவா் மணி ராஜா, துணைச் செயலா் கருமலை, வட்ட போராட்டக் குழுத் தலைவா் அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட போராட்டக் குழுத் தலைவா் ரகுராமன் தலைமையில்
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
