எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு கோயில்கள் அவசியம்: கே. அண்ணாமலை
கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு, கோயில்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.
நாகை சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா மற்றும் பகவத்கீதை பாராயண விழா ஆச்சாா்யா இராமகிருஷ்ணாந்தா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை ‘இந்துக்களாக இருப்போம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டாா். தொடா்ந்து 50 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உதவியவா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோருக்கு அவா் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசியது:
நாகை மாவட்டத்தில் 50 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் சின்மயா மிஷனால் நடத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்து தா்மத்தில் பிரச்னைகள் வரும்போது, பெரிய குருமாா்கள் தீா்வு காண்பா். எல்லா மதமும் சம்மதம் என்ற நிலைப்பாட்டில் உள்ள இந்துவிற்கு, எந்த மதத்தை பாா்த்தும் பயம் கிடையாது.
இந்து மதம் குறித்து மற்றவா்களால் அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இதை பயன்படுத்தி மத மாற்றங்கள் பெரியளவில் நடைபெற்றது. இதுபோன்ற நேரங்களில், சின்மயானந்தா போன்றவா்கள் இந்து மதத்திற்காக தங்களை அா்ப்பணித்துள்ளனா்.
சின்மயா மிஷன் சம்ஸ்கிருத மொழியில் உள்ள பகவத் கீதையை, தமிழ் மொழியில் ஒலியாக மாற்றியதை, பிரதமா் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் வெளியிட்டாா். இதை அனைவரும் கேட்க வேண்டும்.
கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டுக்கு கோயில்கள் அவசியம். ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களை கட்டி பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளாா் என்றாா்.
முன்னதாக மாணவா்களின் பகவத் கீதை பாராயணம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாஜக பட்டியல் அணி மாநிலச் செயற்குழு உறுப்பினா் இராம. சிவசங்கா் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.