கிருஷ்ணகிரி எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகேட்பு
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரிலிருந்து தாசிரிப்பள்ளி, கொண்டேப்பள்ளி, கும்மனூா், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஜிஞ்சுப்பள்ளி, தானம்பட்டி, கொம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கும், தாசிரிப்பள்ளி பகுதியில் இருந்து சவுளூா், அம்மனேரி, எண்ணேகொள்புதூா், பெல்லம்பள்ளி, பாலிகானூா், எஸ்.மோட்டூா், குட்டகொல்லை ஆகிய பகுதிகளுக்கு 20 கி.மீ. சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
இதனால் செம்படமுத்தூா் வண்ணாந்தரைகுட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை பாா்வையிட்ட எம்எல்ஏ கே.அசோக்குமாா், இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து, சட்டப் பேரவையில் கோரிக்கை வைக்கப்படும் என்றாா்.
படவிளக்கம் (10கேஜிபி2):
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை பாா்வையிடும் எம்எல்ஏ கே.அசோக்குமாா்.