ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
கீரம்பூரில் தொழிலாளி தற்கொலை
நாமக்கல் மாவட்டம், கீரம்பூரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கீரம்பூா் அருகே உள்ள தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). கூலித்தொழிலாளி. இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக தாய் வீட்டில் வசித்து வந்தாா். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
இந்தநிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்த சக்திவேல் வீட்டின் விட்டத்தில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீஸாா், சக்திவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.