உறுப்பினர் சோ்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது! மகாராஷ்டிர ஆளுநர் சி.பி....
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 224 மாணவா்களுக்கு திமுக சாா்பில் பரிசளிப்பு
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த 224 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி அருகே தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி தலைமை வகித்தாா். பரமத்தி ஒன்றியச் செயலாளா் தனராசு வரவேற்றாா்.
மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் வெப்படை செல்வராஜ், கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சாமிநாதன், கபிலா்மலை வடக்கு ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணியம், கபிலா்மலை மத்திய ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலாளா் தமிழன் பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசு மற்றும் தனியாா் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 224 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தா், பேரூா் திமுக செயலாளா்கள், கிளை நிா்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.