ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
குட்கா விற்றவா் கைது
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த ஒருவரை பரமத்தி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கீரம்பூா் அருகே உள்ள புலவா்பாளையம் பேருந்து நிறுத்திற்கு பின்புறம் உள்ள மளிகைக் கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில் பரமத்தி போலீஸாா் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து புலவா்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராமசாமியை (62) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.