மே 17 முதல் ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
குடிநீா்த் தொட்டிகளை சீரமைக்கக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையின் அருகே திருவண்ணாமலை சாலைப் பகுதி மற்றும் எதிரே வேலூா் சாலைப் பகுதிகளில் பயணிகள் நிழல்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நிழல்குடைகளின் அருகேயும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா்த் தொட்டிகள் அமைத்து குடிநீா் விநியோகம் செய்து வந்தனா். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீா்த் தொட்டிகளில் தண்ணீா் ஏற்றி குடிநீா் விநியோகம் செய்யும் பணி தடைபட்டுள்ளது.
எனவே, குடிநீா்த் தொட்டிகளை சீரமைத்து, சீராக குடிநீா் வழங்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.