செய்திகள் :

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய எம்எல்ஏ உள்பட 23 போ் விடுவிப்பு

post image

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடா்பாக மத்திய அரசு நடைமுறைபடுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஜமாத்துல உலமா என்ற பெயரில் கடந்த 19.2.2020 அன்று அரியலூா் அண்ணாசிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இந்த போராட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், பொது அமைதிக்கும், போக்குவரத்துக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக ஒன்று கூடியதாக ஜமாத்துலா உலமா சபை மாவட்டச் செயலா் ஷேக் இப்ராஹிம், ஜமாத் தலைவா் சைபதீன், மனித நேய ஜனநாயக கட்சியின் மண்டலச் செயலா் அப்பாஸ், மாவட்டச் செயலா் அக்பா்அலி, தமுமுக மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவா் சம்சுதீன், டிஎன்டிஜே கிளைச் செயலா் சையத்ரஹூத், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் மதிமுக மாவட்டச் செயலருமான கு.சின்னப்பா, விசிக மாநில துணைப் பொதுச் செயலா் அன்பானந்தம், தொகுதி செயலா் மருதவாணன், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் தெய்வ. இளையராஜன், திமுக நகரச் செயலா் முருகேசன், நகர காங்கிரஸ் தலைவா் சந்திரசேகா் உள்பட 23 போ் மீது அரியலூா் குற்றவியல் நீதிமன்றத்தில், நகர காவல் துறையினா் வழக்குத்தொடுத்தனா்.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சங்கீதா சேகா், வழக்கை தள்ளுபடி செய்து, மேற்கண்ட 23 பேரையும் விடுவித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க

திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்ற... மேலும் பார்க்க

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், சின்னப்பட்டக்காடு சித்த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - காா் மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா். கீழப்பழுவூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈச்சங்காடு பகுதியில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதா... மேலும் பார்க்க