எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
மாரண்டஅள்ளி அருகே குடும்பத் தகராறு காரணமாக எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சின்னசெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குமாா் மனைவி ராணி (30). இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி ராணி தனது கணவருடன் சோ்ந்து வாழ முடிவு செய்து அவருடைய வீட்டிற்கு சென்றபோது, மாமியாருடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராணி தனது வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தின்றுவிட்டதாக தெரிகிறது.
அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாக மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.