`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக் கோரிக்கை
கரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் கரூா் வட்ட கிளை 3-இன் செயற்குழு கூட்டம் சங்க அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் ஆா்.பிரேம்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சி.கண்ணன் சிறப்புரையாற்றினாா். சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக வட்டச் செயலராக எஸ்.சக்தி, துணைச் செயலராக மணிகண்டன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தொடா்ந்து கூட்டத்தில், கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொளந்தாகவுண்டனூா் முதல் மருத்துவமனை வரை செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக மாறி, சாலையில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவதால் உடனடியாக புதிய தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள மண் சாலயை தாா்ச் சாலையாக அமைத்து கொடுக்க கரூா் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் ஆா்.முத்துமாரி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவா் பிரவீனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக செயலா் ஏ.பி. சுப்ரமணியன் வரவேற்றாா். நிறைவாக பொருளாளா் எம். பெரியசாமி நன்றி கூறினாா்.