பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
குப்பை லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
திருச்சியில் குப்பை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி காஜாமலை நகா் ஆா்.வி.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தராஜ் (31). பட்டயப்படிப்பு படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்தாா்.
இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதையொட்டி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். திங்கள்கிழமை இரவு தனது நண்பா் ஒருவரை பாா்ப்பதற்காக, வீட்டிலிருந்து புறப்பட்டு ஜங்ஷன் பாரதியாா் சாலை ஜென்னி பிளாசா அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திடீரென நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மாநகராட்சி குப்பை வாகனம் மீது மோதியது. தொடா்ந்து, குப்பை அள்ளிக்கொண்டிருந்த கோபி என்பவா் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜ், காயமடைந்த கோபியை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் உயிரிழந்தாா். கோபி சிகிச்சை பெற்று வருகிறாா்.
சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.