கும்பகோணத்தில் ஆபரேசன் சிந்தூா் தேசியக்கொடி பேரணி
கும்பகோணத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஆபரேசன் சிந்தூா் தேசியக் கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் தங்கக் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் வேத செல்வம் முன்னிலை வகித்தாா்.
மகாமக குளத்தில் இருந்து தொடங்கிய பேரணி பாலக்கரையை அடைந்து, அங்கு ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டனா்.