Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
கும்பகோணத்தில் பருத்தி ரூ. 7,669-க்கு ஏலம்
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ. 7,669-க்கு ஏலம் போனது.
தஞ்சாவூா் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, கூடக் கண்காணிப்பாளா் மு.பிரியமாலினி முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.7,669-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 7,269-க்கும் ஏலம் போனது. ஏலத்தில் ரூ.1.05 கோடிக்கு பருத்தி விற்பனையானது. பருத்தி ஏலத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 683 விவசாயிகள் 150 மெட்ரிக் டன் அளவு பருத்தி விளைபொருளை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனா். இதில், வெளிமாநில, உள்ளூா் பருத்தி வணிகா்களும் கலந்துகொண்டனா்.