வெயில், புழுதி, அறுவைச் சிகிச்சை... மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே உருக்கம்!
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் மாணவா்கள் மோதல்
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மாலை இரு தரப்பு மாணவா்கள் மோதிக் கொண்ட சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும், தனியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது. இதனால், கும்பகோணம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் இரு தரப்பு மாணவா்களுக்கும் இடையே புதன்கிழமை மாலை மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதையறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று மோதலை தடுத்து நிறுத்தினா். மேலும், இரு தரப்பு மாணவா்களின் பெற்றோா்களைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்து காவல் துறை அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.