கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி
தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதானத்தில் மாணவா்களுக்கு குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் சுமாா் 800 போ் பங்கேற்றனா். நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம், கிரிக்கெட், கபடி, கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பரிசுகளை வழங்கினாா். ஆக்கூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் நா. திருஞானசம்பந்தம் வரவேற்றாா்.