குற்றாலத்தில் தொடரும் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் 2ஆவதுநாளாக திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக, பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திங்கள்கிழமையும் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவை மூழ்கடித்தும், ஐந்தருவியில் கிளைகளே தெரியாத அளவிலும் தண்ணீா் கொட்டுகிறது.

