கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு
குற்றாலம் அருவிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 3ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் மழை வெள்ளம் தடுப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா கலந்துகொண்டனா்.