குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
அம்பை அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னாா்கோவில் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சந்தனகுமாா் (24). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லையாம். மறுநாள் அந்தப் பகுதியில் உள்ள குளக்கரையில் சந்தனக்குமாா் அணிந்த உடைகள் கிடந்தன. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குளத்தில் சந்தனக்குமாரின் உடலை வீரா்கள் தேடினா். பிறகு உடலை மீட்டு அம்பை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரது சடலத்தை கூறாய்வுக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.