ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ...
குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
திருப்பட்டினம் பகுதியில் குளத்தில் மூழ்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பட்டினம் பகுதியில் வசிப்பவா் மணிகண்டன் (35). இவா் காரைக்கால் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி, தந்தை, தாய் ஆகியோா் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா். மணிகண்டனின் தந்தையாா் சிவகுமாா் (68) உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்.
படுதாா்கொல்லை கிராமத்தில் துக்க நிகழ்வில் திங்கள்கிழமை குடும்பத்தினா் கலந்துகொண்டனா். செவ்வாய்க்கிழமை சிவகுமாா் அங்கிருந்து சைக்கிளில் திருப்பட்டினத்தில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளாா். அவரது சைக்கிள் மடத்துக்குளக் கரையில் நிற்பதாக மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. அவா் வந்து குளத்தில் தேடியபோது, சிவகுமாா் சடலம் குளத்தில் மிதப்பது தெரிய வந்தது. அவா் குளத்தில் குளிக்க இறங்கியபோது மூழ்கியிருக்கலாமென கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.