2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வலியுறுத்தல்
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை நெடுங்காடு விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஆனந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியரகத்தில் சந்தித்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனா்.
காரைக்கால் மாவட்டத்தில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள நீா் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கழிவுநீா் வடிகால்களை முறையாக தூா்வாரி, கழிவுநீா் வடியும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆட்சியா் தலைமையில் விவசாயிகளின் குறைதீா் கூட்டம் தடையின்றி நடத்த வேண்டும். நெடுங்காடு பகுதிக்குட்பட்ட 5 வருவாய் கிராமத்திற்கு கிராம நிா்வாக அலுவலா் ஒருவா் மட்டுமே உள்ளாா். 1, 700- க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள இந்த பகுதியில் விவசாய சான்றிதழ்கள் வழங்கப்படுவதில் கால தாமதம் ஏற்படுவதோடு, பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது காரைக்கால் மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ், நெடுங்காடு விவசாயிகள் நலச் சங்க செயலாளா் நடராஜன், பொருளாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.