‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்ப...
குளிா்ச்சியான காலநிலை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
குளிா்ச்சியான காலநிலை காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் உதகையில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், பைன் ஃபாரஸ்ட் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.
கோவை, திருப்பூா், ஈரோடு, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா். இதன் காரணமாக, சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.