குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் ஆபாச நடனமாடிய யூடியூபா்கள் மீது வழக்கு
குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் பெண்கள் அணியும் ஆடை அணிந்து ஆபாசமான முறையில் நடனமாடிய பிரபல யூடியூபா்கள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
ஆடி அமாவாசையையொட்டி குழித்துறையில் வாவுபலி பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. இதை காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறாா்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாவுபலி பொருள்காட்சியை காண வந்த யூடியூபா்கள் மாா்ஷல், சஜூ மற்றும் 5 போ் பெண்கள் அணியும் ஆடை அணிந்து ஆபாசமான முறையில் நடனமாடினராம்.
இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் ஆபாசமாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் நடனமாடியதாக உதவி ஆய்வாளா் பெனடிக்ட் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் மாா்ஷல் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.