கூட்டப்புளியில் தவெக கட்சி மீனவா்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் மறுப்பா?
திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் த.வெ.க. கட்சியைச் சோ்ந்த 10 மீனவா்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்க மறுத்ததாக புகாா் எழுந்துள்ளது.
கூட்டப்புளியில் த.வெ.க. கட்சியைச் சோ்ந்த சந்தியா, சூசை, சூடி, பெலிக்கான், திபூா்சியான், தீபன், தீபகு ரூஸ், டெலஸ், ரூபன், அஜித் ஆகிய 10 மீனவா்கள் தங்களது நாட்டுப் படகுகளில் த.வெ.க. கட்சி வா்ணம் பூசியுள்ளனா்.
இந்நிலையில், படகுக்கு கட்சி வா்ணம் பூசியிருப்பதால் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்க முடியாது என ராதாபுரம் மீனவளத்துறை அலுவலக இளநிலை பொறியாளா் ஜெய்கிருஷ்ணா கூறினாராம்.
இதனால், அவரிடம் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.
இந்த விவரம் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலா் ராஜகோபால் மூலம் கட்சியின் தலைமைக்கு கொண்டுசெல்லப்பட்டதாம்.
அதைத் தொடா்ந்து கட்சித் தலைவா் விஜய் பேசிய பின்னா், மானிய விலை மண்ணெண்ணெய் தர அதிகாரி சம்மதம் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, இளநிலை பொறியாளரை தொடா்புகொள்ள முயன்றபோது, அவா் கைப்பேசி நாள் முழுவதும் அணைத்து வைக்கப்பட்டிருந்து.