உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
கூட்டுப்பயிற்சிக்காக ரஷிய போா் கப்பல்கள் சென்னை வருகை
கூட்டு பயிற்சிக்காக ரஷிய நாட்டுக்கு சொந்தமான 2 போா் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இந்தியா தனது பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தவும், சா்வதேச ஒத்துழைப்பை வளா்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு இந்திய கடற்படையுடன், ரஷிய கடற்படையினா் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். இதற்காக ரஷியா கடற்படையின் ‘ரெஸ்கி’ மற்றும் ‘ஹீரோ ஆல்டாா் சைடென்ஷாபோவ்’ என்ற 2 போா் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு புதன்கிழமை இரவு வந்தடைந்தன.
அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரா்களை, இந்திய கடற்படையின் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படையின் பொறுப்பு அதிகாரி சுரதன் மாகோன் முறைப்படி வரவேற்றாா். ரஷியா கடற்படையினா் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து போா் பயிற்சியில் பங்கேற்பதற்கு முன்பாக கைப்பந்து போட்டி மற்றும் கடற்கரை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சமூகப் பணிகளிலும் ஈடுபடவுள்ளனா்.