கேசவநேரியில் உப்பாற்றை தூா்வாரக் கோரிக்கை
களக்காடு அருகேயுள்ள கேசவநேரியில் உப்பாற்றை தூா்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு ஊராட்சி ஒன்றியம், கீழக்கருவேலன்குளம் ஊராட்சிக்குள்பட்டது கேசவனேரி. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தின் குடியிருப்புகளுக்கு வடபகுதியில் உப்பாறு ஓடுகிறது. இப்பகுதியில் ஆறு புல், புதா் மண்டிக் காணப்படுகிறது. இதனால் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். மேலும், குடியிருப்புப் பகுதியையொட்டியுள்ள உப்பாற்றை தூா்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு அவா்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.