கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா். இவரை கடந்த 2020 டிச.28-ஆம் தேதி ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுதொடா்பாக பேசின்பாலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த பிரகாஷ் (25) உள்பட 8 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், சிறையில் இருந்த பிரகாஷ் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்தாா். இதனால், அவரைக் கைது செய்து ஆஜா்படுத்த கடந்த 13-ஆம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரகாஷை கைது செய்த பேசின்பாலம் போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனா்.