ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
கோவில்பட்டியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவா் சரவண கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் காளிதாசன் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட பாா்வையாளா் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமமூா்த்தி, வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் வெங்கடேசன் சென்னை கேசவன், பட்டியலணி மாநில பொதுச்செயலா் சிவந்தி நாராயணன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்தும், மும்மொழி கொள்கை குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்பம் இயக்கத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலா்கள் வேல் ராஜா, கிஷோா் குமாா், விருதுநகா் பாராளுமன்ற பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து சமகல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பிலான மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கத்தை தென்காசி மாவட்ட பாா்வையாளா் தொடங்கி வைத்தாா்.