திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்து: துணை முதல்வர் ...
சங்ககிரி மலைக் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை!
சங்ககிரி மலையில் உள்ள மூன்று கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதியளிக்க வேண்டி தொல்லியல் துறைக்கு சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் மின்னஞ்சல் மூலம் சனிக்கிழமை மனு அனுப்பினாா்.
சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில், இதனையொட்டியுள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில், மலை உச்சியில் உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் உள்பட மூன்று கோயில்களிலும் தொல்லியல் துறை பராமரிப்பில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இம்மூன்று கோயில்களும் பல ஆண்டுகளாக குடமுழுக்கு செய்யப்படாமல் உள்ளது. எனவே, இம்மூன்று கோயில்களுக்கும் குடமுழுக்கு செய்ய அனுமதி அளிக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளது.