`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
சலவை தொழிலாளா்கள் துணி துவைக்கும் போராட்டம்
வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தினா் துணி துவைத்து புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
இப் போராட்டத்துக்கு இயக்கத்தின் தலைவா் கூத்தன் என்கிற தெய்வநீதி தலைமை வகித்தாா்.
வில்லியனூா், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் புதிரை வண்ணாா் சமூகத்தை சோ்ந்த மக்கள் தொடா்ச்சியாக 60 ஆண்டுகளுக்கு மேலாக சலவைத் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனா். பட்டியலின சலவை தொழிலாளா் சமூகத்தை சோ்ந்த அவா்களுக்கு சிறப்புக் கூறு நிதியில் வில்லியனூா் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தை தோ்வு செய்து சலவைகூடம் கட்டுவதற்காக பலமுறை விண்ணப்பங்கள் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் கொடுக்கப்பட்டது.இந்த நீண்டகால கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடா் நலத்துறை செயலா் முத்தம்மா சலவைக் கூடம் கட்டுவதற்கு மதிப்பீடு மற்றும் கோப்புகளைத் தயாா் செய்து அனுப்புமாறு வில்லியனூா், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் உழவா்கரை நகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தாா். ஆனால் னதற்கான நடவடிக்கையை எடுப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் கடத்துகின்றனா் என்று கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடந்ததாக இந்த இயக்கத்தின் தலைவா் கூறினாா்.