அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
சவுடு மண் எடுக்க எதிா்ப்பு: வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
கீழையூா் அருகே ஏரியில் சவுடு மண் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் ஊராட்சி சின்னேரியில் 540 மீட்டா் பரப்பளவில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத் துறை அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து, சின்னேரியில் சவுரி மண் அள்ள ஜேசிபி இயந்திரங்கள் லாரிகள் ஆகியவை வந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிகழ்விடத்துக்கு வந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ், காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நிலத்தடி நீா்வளம் பாதிக்கும் என்பதால் சின்னேரியில் சவுடு மண் அள்ள அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.