மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு
கீழையூா் அருகே திருப்பூண்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட 5-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஜீ. வினோத் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே. சித்தாா்த்தன் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் டி. லதா இரங்கல் தீா்மானம் வாசித்தாா். மாநில துணைச் செயலாளா் ஏ.வி. சிங்காரவேலன் துவக்கவுரையாற்றினாா்.
மாவட்டச் செயலாளா் ப. சுபாஷ் சந்திரபோஸ் வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். சிறுபான்மை நலக் குழு தலைவா் எம். அப்துல்அஜீஸ், சிபிஐ (எம்) கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் டி. வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும்; ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே துவக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இரண்டு தம்பதியருக்கு, கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகைமாலி சால்வை அணிவித்து வாழ்த்தினாா். நிறைவாக புதிதாக தோ்வு செய்யப்பட்ட மாவட்டத் தலைவா் அ.தி. அன்பழகன் நன்றி கூறினாா்.