மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
நரிமணத்தில் வீடு தேடி ரேஷன் பொருள்கள்
திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்கப்பட்டது.
முதியோா் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் திருமருகல் ஒன்றியம் நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நரிமணம், உத்தமசோழபுரம், குத்தாலம், கோபுராஜபுரம், பனங்குடி, மேலவாஞ்சூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 96 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டது.
திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.டி.எஸ்.சரவணன் தலைமை வகித்து பொருள்கள் வழங்குவதைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் பி.என்.காா்த்திக் முன்னிலை வகித்தாா்.
இதில் கூட்டுறவு கடன் சங்கத்தின் கூடுதல் (பொ) செயலாளா் எம்.திருநாவுக்கரசு செயலாளா் சி.சிவசண்முகம் அங்காடி விற்பனையாளா்கள் ஜெயப்பிரியா, பரமேஸ்வரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் ஜனனி பாலாஜி, மகேந்திரன், திமுக மாவட்ட பிரதிநிதி சோமு, ஒன்றிய துணை செயலாளா் பாளையன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.