டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
பால முனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழா
திருக்குவளை பால முனீஸ்வரா் கோயில் 15-ஆம் ஆண்டு ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்குவளை பகுதியில் அமைந்துள்ள சுமாா் 21 அடி உயர பால முனீஸ்வரருக்கு பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு .பின்னா் மலா்களால் அலங்கரித்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி விடியவிடிய நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இரவு சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.
