செய்திகள் :

சாதனைப் பெண் குழந்தைகளுக்கு விருது

post image

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றியவா்களுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சமூக நலத் துறை சாா்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு நிகழாண்டுக்கான மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளது.

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ஆம் தேதி மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ. ஒரு லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படவுள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதேனும் ஒரு வகையில் சிறப்பான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

இந்த விருதைப் பெற குழந்தையின் பெயா், பெற்றோா் முகவரி, ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர,தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியனவற்றை ஒரு பக்கத்திற்கு மிகாமல் தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை வரும் நவம்பா் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதற்கு இணையதளத்தில் விண்ணப்பித்து மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக பழைய கட்டடம் முதல் தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

செஸ் போட்டி பரிசளிப்பு

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. பல்லவா செஸ் மையம் சாா்பில் மாணவ, மாணவி... மேலும் பார்க்க

நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆவேசம்: பாலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம், பாலூரில் சென்னையிலிருந்து அரக்கோணம் சென்ற ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ரயிலில் இருந்த பயணிகள் திடீரென ரயில் மறியல... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியமன ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நியமன ஆணைகள் வழங்கினா... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்சியில் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்/திருவள்ளூா்: காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். டாஸ்மாக் கடைகள... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: லாரி ஓட்டுநா் கொலை

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ராய் (47). வ... மேலும் பார்க்க