அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்
திருவிடைமருதூா் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடி அருகேயுள்ள குத்துக்குடி சாலை வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்காக கடந்த ஆறு மாதங்கள் முன்பு தோண்டப்பட்டது. அந்தச் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. ஆகையால் இச்சாலையில் செல்லும்வாகன ஓட்டிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. இதன்காரணமாக வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு சாலையை சீரமைக்கக் கோரி கோஷமிட்டனா். இதுகுறித்துத் தகவல் அறிந்த திருநீலக்குடி போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.