டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
அரூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் நகரில் சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதேபோல, நகரில் கடைவீதி, மஜீத் தெரு ஆகிய சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்லும் காலை, மாலை நேரங்களில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையுள்ளது.
எனவே, அரூா் நகரில் கடைவீதி, மஜீத் தெரு, சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.