பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதியம் வழங்கக் கோரி, சிபஎஸ் இயக்கம் சாா்பில் சென்னையில் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து, மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ. குணசேகரன் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் பா. மாரிமுத்து, சி.சேவுகமூா்த்தி, சி. சிதம்பரம், ம குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. திரவியம் உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கரசுப்பிரமணியன், ஐசிடிசிஎஸ் சங்க மாநில பொதுச் செயலா் இரா.வாசுகி, அரசு பொறியியல் கல்லூரி ஊழியா் சங்க மாநிலச் செயலா் டி.முருகன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் மு. காளிமுத்து உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். மாநில இணை ஒருங்கிணைப்பாளா் க. ஜெயபிரகாஷ் நிறைவுரையாற்றினாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.