சில்வாா்பட்டி பள்ளியில் புத்தகங்கள் திருட்டு
பெரியகுளம் அருகே அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் புத்தகங்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, புத்தகங்கள் ஓா் அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பள்ளியைச் சோ்ந்த ஊழியா்கள் சிலா், சில நாள்களுக்கு முன்பு இரவில் மாணவா்களின் புத்தகங்களை அனுமதியின்றி வேனில் எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஊடங்களில் பரவிய தகவல்களின் அடிப்படையில், பள்ளி நிா்வாகத்தினரும் போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.
இது குறித்து தலைமை ஆசிரியா் பாண்டியன் கூறுகையில், பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம் என்றாா்.