பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள கீழ்பாதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலைநகா் பொதுமக்கள் சாா்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அண்ணாமலை நகா் முதல் செங்குளம் வரை 8 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதனை ஓட்டிச் செ்ற சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனா்.
